Categories
அரசியல் மாநில செய்திகள்

தவறு செய்யாத மனிதர்களே இல்லை..! சாரி கேட்டுட்டாருல்ல… மன்னிச்சு ஏத்துக்கிட்டோம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  நயினார் நாகேந்திரன் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். யூட்யூபிலும் போட்டுள்ளார். அதோடு அந்த பிரச்சனை முடிஞ்சது. தவறு செய்யாத மனிதர்களே கிடையாது. ஆனால் தவறு செய்த பிறகு அதனை எண்ணி வருத்தம் தெரிவித்தால், அதை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ளப்படும்.

எங்கள் குழந்தைகள் எங்களுக்கு முக்கியம். அவர்கள் அவர்கள் குழந்தை அவர்களுக்கு முக்கியம். அவர்களது குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டும் என்று எல்லோரது பெற்றோர்களும் விரும்புவார்கள். நீங்கள் எப்படி உங்களது குழந்தை நல்லா வளர்க்கணும், ஆரோக்கியமா இருக்கணும். நல்லா படிக்கணும் அந்த குழந்தை எதிர்காலத்தில் சிறப்பா இருக்கணும், எண்ணுகிறோமோ..

அதேபோல ஒவ்வொரு கட்சியில் இருக்கின்ற நிர்வாகிகளும் அந்த கட்சி தலைவர்கள் நம்முடைய குழந்தைகள் போல தான் பார்க்க வேண்டும், எப்படி குழந்தைகளைப் பேணி காக்கின்றோமோ அதேபோல கட்சியை பேணிக் காப்பதே அந்த கட்சியின் தலைவரின் கடமையாகும். அந்தக் கடமையை நாங்கள் செய்கிறோம். தலைமைக் கழகத்தின் மூலமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சார்பாக இந்த மாமன்ற உறுப்பினர் தேர்தல் வேட்பாளர்கள்,  நகர மன்றத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள்,  பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவதற்கு கழகத்தினுடைய தொண்டர்கள் நிர்வாகிகள் உழைப்பார்கள். நாங்கள் நிச்சயமாக உண்மையாக வெற்றி பெறுவோம். அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிகமான இடங்களிலேயே மேயரை கைப்பற்றுவோம்,  நகராட்சியை கைப்பற்றுவோம், பேரூராட்சி கைப்பற்றுவோம் என தெரிவித்தார்.

Categories

Tech |