Categories
Tech டெக்னாலஜி

தவறுதலாக வாட்ஸ்அப் மெசேஜை ஆர்ஷிவ் செய்தால்?…. என்ன செய்ய வேண்டும்?…. இதோ விபரம்……!!!!

தவறுதலாக வாட்ஸ்அப் சேட் ஆர்ஷிவ் செய்யப்பட்டால், அதனை எப்படி un archive செய்து மீண்டுமாக அந்த சேட் கொண்டுவருவது? என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.

வாட்ஸ்அப் சேட் ஆர்ஷிவ் என்றால் என்ன?

தனி நபர் (அ) வாட்ஸ்அப் குழுவில் இருந்து மெசேஜ் பெற விரும்பாத பயனாளர்கள் சேட்-ஐ ஆர்ஷிவ் செய்து வைக்கலாம். அது உங்களது சேட் பக்கத்தில் இருந்து மறைந்துவிடும். எனினும் அந்த சேட் தகவல்கள் அழியாது.

Archive மற்றும் un archive செய்வது எப்படி..?

நீங்கள் ஒரு குறிப்பிட்ட சேட்-ஐ மறைக்க விரும்பினால் (அ) குரூப் சேட்டிலிருந்து நோட்டிவிகேஷன் பாப்-அப் வேண்டாம் என நினைத்தால் ஆர்ஷிவ் ஆப்ஷன் பயன் உள்ளதாக இருக்கும். ஆண்ட்ராய்டு போன் பயனாளர்கள் சேட் ஆர்ஷிவ் செய்ய முதலாவதாக சேட் பக்கம் சென்று எந்த சேட்-ஐ ஆர்ஷிவ் செய்ய வேண்டும் என்பதை செலக்ட் செய்யவும்.

அந்த சேட்-ஐ அழுத்தி பிடிக்கவும். தற்போது பாக்ஸ் போன்ற ஐகான் ( downward arrow) பட்டனை தட்டவேண்டும். அந்த சேட் ஆர்ஷிவ் செய்யப்பட்டு archived section பக்கத்திற்கு சென்றுவிடும். பின் சேட் அன்-ஆர்ஷிவ் செய்ய விரும்பினால் சேட் பக்கத்தின் மேலே, வலப்புறத்திலுள்ள archived section மெனுவிற்கு செல்லவும். அங்கு எந்த சேட் அன்-ஆர்ஷிவ் செய்ய வேண்டுமோ அதனை தேர்ந்தெடுத்து அழுத்தி பிடிக்கவும். அதனை தொடர்ந்து பாக்ஸ் போன்ற ஐகான் (upward arrow) பட்டனை கொடுத்தால் சேட் அன்-ஆர்ஷிவ் செய்யப்படும்.

Categories

Tech |