Categories
தேசிய செய்திகள்

தவறுதலாக கொல்லப்பட்ட கன்றுக்குட்டி … பரிகாரமாக 13 வயது மகள் … பஞ்சாயத்து தீர்ப்பால் அதிர்ச்சி..!

மத்திய பிரதேச மாநிலத்தில் தவறுதலாக கன்றுக்குட்டியை கொன்ற  நபருக்கு அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரின் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.  

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள வித்திசா மாவட்டத்தில் நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றார்.  அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் கன்று குட்டி ஒன்றின் மீது மோதியது இதில் அந்த கன்று  பலியாகியுள்ளது.

இதையடுத்து அந்த ஊரில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் ஒன்றுகூடி கன்று குட்டியை கொன்ற நபர்  தனது 13 வயது மகளை கன்று குட்டியின் உரிமையாளரருக்கு  திருமணம் செய்து வைக்க உத்தரவிட்டுள்ளார்கள்.

அதை ஏற்றுக் கொண்ட அந்த குழந்தையின்  தந்தை திருமண ஏற்பாடுகளை முன்னின்று நடத்தி உள்ளார் இந்த தகவல் அறிந்த போலீசார்  திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்பு  இந்திய குழந்தைகள் நல அமைப்பு அந்த சிறுமியின் பெற்றோரிடம் 18 வயது நிரம்பாத  சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்ற ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அந்த கிராமத்தில் இது போன்ற கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது  வழக்கமாக உள்ளது என்று பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் தான் செய்த தவறை அவர்கள்  உணர வேண்டும் என்பதற்கு இது போன்ற தீர்ப்பு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |