இந்தியாவில் கிரிக்கெட்டை தவிர ஏராளமான திறமைகளை ஊக்குவிக்கக் கூடிய பல விளையாட்டுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு மட்டும் முக்கியத்துவம் தராதீர்கள் என்று உயர்நீதிமன்ற கிளை வலியுறுத்தியுள்ளது.
அனைத்து வகையான விளையாட்டு வீரர்களுக்கும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். கிரிக்கெட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் தருவது தவறான நடைமுறையாகும் என தெரிவித்த நீதிமன்றம், கிரிக்கெட் மட்டும்தான் விளையாட்டு என்ற எண்ணத்தை இளைஞர்களிடம் செயற்கையாக ஏற்படுத்தியுள்ளனர் என கூறியுள்ளது.