Categories
தேசிய செய்திகள்

“தவறான செய்தி வெளியிடும் பத்திரிகை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”… முதல்வர் ரங்கசாமி உறுதி…!!!!!!

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியுள்ளது. அப்போது சில பத்திரிகைகள் தவறான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் RNI அனுமதி இல்லாத பத்திரிகைகளை தடை செய்ய வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி பதிவு செய்யப்படாத பத்திரிகைகள் புதுச்சேரியில் தடை செய்யப்படும் என தவறான செய்தி வெளியிடும் பத்திரிகை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல் அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில் முதலமைச்சரை தொடர்ந்து பேசிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் புதுச்சேரி காவல்துறைக்கு கட்டிடங்கள் கட்ட 9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறையில் ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். மேலும் புதுச்சேரியில் நிறுத்தப்பட்டிருக்கின்ற மாணவர்களுக்கான ஒரு ரூபாய் பேருந்து ஒரு வாரத்திற்குள் இயக்கப்படும் எனவும் 10 நாட்களுக்குள் சீருடை வழங்கப்படும் எனவும் அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

Categories

Tech |