முதல் அமைச்சரை தரக்குறைவாக பேசிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆனதாண்டவபுரம் பகுதியில் விஜயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது “டுவிட்டரில்”தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தரக்குறைவாக பேசியுள்ளார்.
இதனை பார்த்த நகரசபை உறுப்பினர் மாசிலாமணி காவல் நிலையத்தில் விஜயராமன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயராமன் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.