Categories
தேசிய செய்திகள்

தள்ளுபடி விலையில் தங்கம் வாங்க ஓர் அரிய வாய்ப்பு…. இதோ சூப்பர் சலுகை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பண்டிகை நாட்களில் மக்கள் தங்கம், வெள்ளி மற்றும் பாத்திரங்கள் போன்ற பொருட்களை அதிகம் வாங்குவார்கள். கடந்த இரண்டு வாரங்களாக தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் தற்போது தங்கம் வாங்குவதற்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் போன் பே செயலி பயனர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி வாங்கினால் கேஷ் பேக் சலுகை வழங்கப்படும் என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதாவது போன் பே மூலமாக தங்கம் வாங்கினால் 2500 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகையும் வெள்ளி வாங்கினால் 500 ரூபாய் வரை கேஷ் பேக் சலுகையும் கிடைக்கும். டிஜிட்டல் தங்கம், தங்க நாணயங்கள், தங்க கட்டிகள், வெள்ளி காசுகள் மற்றும் வெள்ளி கட்டிகள் ஆகியவற்றை வாங்கினால் இந்த சலுகையை நீங்கள் பெற முடியும்.மேலும் வருகின்ற அக்டோபர் 26ம் தேதி வரை போன் பேசி மூலமாக தங்கம் மற்றும் வெள்ளியை ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் வாங்கினால் தள்ளுபடி கிடைக்கும்.அதே சமயம் நீங்கள் சேமிக்கும் தங்கம் மற்றும் வெள்ளியை வீட்டுக்கே நேரடியாக டெலிவரியும் பெற்றுக் கொள்ள முடியும்.

போன் பே மூலம் தங்கம் வாங்குவது ரொம்ப ஈஸி தான்.

அதற்கு முதலில் ஃபோன் பே செயலியில் wealthஎன்ற பகுதிக்கு சென்று அதில் தங்கம் மற்றும் வெள்ளி பிரிவு கிளிக் செய்ய வேண்டும்.அதில் தங்கம் அல்லது வெள்ளியை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். ரூபாய் அளவிலும் தங்கம் வாங்கலாம் அல்லது கிராம அளவிலும் நீங்கள் தங்கம் வாங்கலாம்.நீங்கள் பணம் செலுத்திய உடன் உங்களின் கணக்கில் தங்கம் அல்லது வெள்ளி வந்து சேர்ந்து விடும்.

Categories

Tech |