Categories
தேசிய செய்திகள்

“தள்ளாத வயதிலும் சாதனை படைத்த மூதாட்டி…!!” குவியும் பாராட்டுக்கள்…!!

பெங்களூருவைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி 6129 அடி உயர மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார். அவரை பற்றிய விபரம் பின்வருமாறு, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 62 வயது மூதாட்டியான நாகரத்தினம்மா தன்னுடைய இளம் வயதில் மலையேற்றத்தில் அதிக ஆர்வம் கொண்டவராக விளங்கியுள்ளார். இந்நிலையில் திருமணத்திற்குப் பின்னர் குழந்தைகள் கணவரை கவனிக்கும் பட்சத்தில் அவர் மலையேற்றத்தில் இருந்து சற்று ஒதுங்கி இருந்துள்ளார். கடைசியாக அவர் மலை ஏறிய போது அவருக்கு 22 வயது என அவரே குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் நாகரத்தினம்மா தன்னுடைய 62வது வயதில் அதாவது தற்போது தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள 6 ஆயிரத்து 550 அடி உயரமுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ள பகுதிக்கு சென்று 13 பேர் கொண்ட குழுவினருடன் சேர்ந்து மலையில் ஏறியுள்ளார். இதனை பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதோடு இந்த மூதாட்டி மலை ஏறுவதை வனத்துறை அதிகாரி ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்திலும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களை கலக்கி வருகிறது.

Categories

Tech |