Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தள்ளாடியபடி வந்த மாணவிகள்…. ஒயின் வாங்கி கொடுத்த வாலிபர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மாணவிகளுக்கு ஒயின் வாங்கி கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள சர்ச் கார்னர் பகுதியில் தள்ளாடியபடி வந்த 3 மாணவிகளை பார்த்த பொதுமக்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து அவர்களுக்கு மயக்கம் தெளிய ஏற்பாடு செய்தனர். இதனை அடுத்து அந்த மாணவிகள் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மாணவிகள் ஒரு அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருவது தெரியவந்தது.

இந்த மாணவிகள் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். இதனால் மறு தேர்வு எழுதுவதற்காக பள்ளி சீருடையுடன் வேறொரு பள்ளிக்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து தங்களுக்கு தெரிந்த ஒருவர் மூலம் மாணவிகள் ஒயின் வாங்கி குடித்ததால் தள்ளாடியபடி வந்துள்ளனர். பின்னர் பெற்றோரை வரவழைத்து போலீசார் மாணவிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மாணவர்களின் பெற்றோர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஒரு மாணவியின் ஆண் நண்பரான பெயிண்டர் தினேஷ்(25) என்பவர் மாணவிகளை மதிய உணவிற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து ஒயின் குடித்தால் கலராக மாறலாம் என கூறி மூன்று மாணவிகளுக்கும் தினேஷ் ரெட் ஒயின் வாங்கி வற்புறுத்தி கொடுத்துள்ளார். இதனால் தினேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |