ஜூலை 21-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை அறிவிக்கப்பட்டுள்ளதால், கேரள மாநிலத்தில் ஊரடங்கில் நாட்களுக்கு சில தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி துணிக் கடைகள் மற்றும் நகைக் கடைகள் போன்றவை இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. காலணிகள், மின்னணு சாதனங்கள் மற்றும் ஃபேன்ஸி பல்பொருள்கள் கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூன்று நாட்கள் தளர்வுகள் அளிக்கப்பட்டதற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தளர்வுகள் அறிவிப்பதன் வாயிலாக கொரோனா மூன்றாவது அலை விரைவில் வருவதை தவிர்க்க முடியாததாகிவிடும். இதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட உத்தரவை கேரள அரசு வாபஸ் பெற வேண்டும். வாபஸ் பெறாவிட்டால் கேரள அரசுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.