Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி65’ அசத்தல் அப்டேட்… படக்குழு வெளியிட்ட மாஸ் வீடியோ… ரசிகர்கள் செம குஷி…!!!

தளபதி 65 படத்தில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து விஜயின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் தளபதி 65 படத்தின் அசத்தலான அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது . அதில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |