Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதி 67 திரைப்படத்தில் தொடரும் வெற்றி கூட்டணி”…. வேற லெவல் நியூஸ்….!!!!

விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 67 படத்தில் லோகேஷ் உடன் இணைந்து இயக்குனர் ரத்தினகுமார் பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது. அண்மையில் வெளியான படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதிலும் விஜய் அமர்ந்திருக்கும் போஸ்டரில் உள்ள பைக்கானது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இத்திரைப்படத்தையடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கின்றார். இந்த நிலையில் படத்தில் இயக்குனர் ரத்னகுமார் பணியாற்ற இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கின்றது. இவர் ஏற்கனவே லோகேஷ் கனகராஜுடன் இணைந்து மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து பணியாற்றி இருந்தார். தற்பொழுது மீண்டும் லோகேஷ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் பணியாற்ற உள்ளார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |