தளபதி 66 திரைப்படத்திலிருந்து வெளியான காட்சிகளால் ரீ ஷூட் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அண்மையில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் அள்ளியது. இதையடுத்து வம்சி இயக்கத்தில் விஜய் தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்ற ஏப்ரல் மாதம் பூஜையுடன் தொடங்கி முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்திருக்கிறது. இத்திரைப்படம் கமர்சியல் திரைப்படமாக அல்லாமல் எமோஷனல் திரைப்படமாக உருவாகி வருவதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகின்ற நிலையில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். இந்நிலையில் ரசிகர்கள் தளபதி 66 திரைப்படத்தை விட்டுவிட்டு விஜயும் லோகேஷ் கனகராஜ் இணையும் தளபதி 67 திரைப்படத்தையே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இது தளபதி 66படக்குழுவை கவலையடையச்செய்துள்ளது. தளபதி 66 படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைத் தளத்தில் வெளியானது. ஆகையால் தளபதி 66 படக்குழு வெளியான காட்சிகளை மீண்டும் புதுப்பித்து எடுப்பதற்கு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.