தளபதி 66 படத்திற்கு தமன் இசையமைக்க இருப்பதாக தகவல் பரவி வந்தது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
Fingers crossed ✌🏽🥁🥁🥁 https://t.co/7dhpTklW2f
— thaman S (@MusicThaman) November 9, 2021
இதைத்தொடர்ந்து விஜய்யின் 66-வது படத்தை வம்சி இயக்க இருப்பதாகவும், தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்க இருப்பதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில் இந்த தகவலை உறுதி செய்யும்படி இசையமைப்பாளர் தமன் டுவிட்டரில் ரசிகருக்கு பதிலளித்துள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.