விஜய் நடிப்பில் இப்போது உருவாகி வரும் படம் பீஸ்ட் ஆகும். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து உள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் வரும் 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அடுத்து தோழா உள்ளிட்டபடங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடிக்க இருக்கிறார்.

அதாவது “தளபதி 66” என்று பெயரிடப்பட்டு உள்ள இப்படம் தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்த படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கவுள்ளார். இதில் நடிக்க உள்ள நடிகை தொடர்பாக அறிவிப்பு வெளியாகியது. அந்த வகையில் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து இருக்கிறார்.

விஜய்யின் 66வது படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கி இருக்கிறது. இதில் விஜய் ராஷ்மிகா, இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்ட படக் குழுவினர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் அந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட வீடியோவை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.