Categories
சினிமா

“தளபதி 66” திரைப்படம்…. படக்குழு வெளியிட்ட புது அப்டேட் நியூஸ்…. குஷியில் ரசிகர்கள்….!!!!

பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். “தளபதி 66” என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்த படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படம் விஜய்யின் ஆரம்பக்கட்டத்தில் வெளியாகிய பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை ஆகிய குடும்ப பின்னணி திரைப்படமாக உருவாகிறது.
இத்திரைபடத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் முழுவீச்சில் நடந்து வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள சூழ்நிலையில், 2ஆம் கட்ட படப்பிடிப்பு  ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக அண்மையில் ஐதராபாத்துக்கு சென்ற விஜய் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்தபடத்தில் இணைந்துள்ள நடிகர்கள் தொடர்பாக படக்குழு அறிவித்துள்ளது.
அந்த வகையில் நடிகர் சரத்குமார் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது பற்றிய தகவல் முன்னரே வெளியாகிய நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை ஜெயசுதா போன்றோரும் இணைந்து உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |