Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 65’ படத்தின் ஹீரோயின் … இந்த நடிகைக்கு அதிக வாய்ப்பு இருக்காமே…!!!

தளபதி 65 படத்தில் நடிக்க பிரபல நடிகை பூஜா ஹெக்டேவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படம் தயாராகியுள்ளது . இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் ,வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர் . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதையடுத்து நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது . சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் .

After Mahesh Babu in Maharshi, Pooja Hedge to romance Vijay in THIS film?

சமீபத்தில் தளபதி 65 படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது . இந்நிலையில் பிரபல ஹீரோயின் பூஜா ஹெக்டேவுக்கு தளபதி 65 படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது . தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே தற்போது தெலுங்கு திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |