தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது நடிகர் விஜய் சைக்கிளில் வந்ததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் தளபதி விஜய் 10 வருடங்களுக்கு பிறகு ஒரு லேட்டஸ்ட் இன்டர்வியூ கொடுத்துள்ளார். இதில் இயக்குனர் நெல்சன் கேட்கும் கேள்விகளுக்கு தளபதி விஜய் பதிலளிக்கிறார். இந்த நேர்காணல் வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்நிலையில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர். இந்தப் படம் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகிறது. மேலும் இயக்குனர் நெல்சன் உடன் தளபதி விஜய் கலந்து கொள்ளும் நேர்காணல் நிகழ்ச்சியில் தமிழக சட்டமன்ற தேர்தலின் போது எதற்காக சைக்கிளில் வந்தீர்கள் என்று கேட்டுள்ளார். இந்த கேள்விக்கு நடிகர் விஜய் கூறிய பதிலைப் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.