வாரிசு படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, பிரகாஷ் ராஜ், சாம், சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கிய நிலையில், 2-ம் கட்ட படப்பிடிப்பானது சென்னையில் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து தற்போது ஹைதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ள நிலையில், தெலுங்கு திரை உலகில் தற்போது பிரச்சனைகள் நடைபெற்று வருவதால், பிரச்சனைகள் முடிவடையும் வரை படப்பிடிப்பு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாரிசு படத்தின் படப்பிடிப்பு தடைபடும் என்று கூறப்பட்டது. ஆனால் வாரிசு படம் தமிழ் படம் என்பதால் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தற்போது கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாரிசு படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடத்தப்படும். மேலும் நாளை முதல் தளபதி வாரிசு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.