Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய்யின் படத்தால்…. உஷாரானா மாஸ் நடிகர்கள்…. என்ன காரணம் தெரியுமா….?

உலக நாயகனை போன்று சூப்பர் ஸ்டாரும் எச்சரிக்கை ஆகிவிட்டார் என்று கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கும் படத்திற்கு ஜெயிலர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஜெயிலர் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஸ்கிரிப்ட் வேலையை நிறைவு செய்வதற்கு ரஜினி கே.எஸ் ரவிக்குமாரை ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஏனெனில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் பலர் நெல்சன் திலீப் குமாரை விமர்சனம் செய்தனர்.

இதன் காரணமாகத்தான் படத்தின் இறுதி ஸ்கிரிப்டை எழுதுவதற்கு கே.எஸ் ரவிக்குமாரை அணுகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதேபோன்று விக்ரம் படத்திலும் கமல்ஹாசன் இறுதி ஸ்கிரிப்ட்டை மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான காரணம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய் ஹீரோ என்றாலும் கூட வில்லன் விஜய் சேதுபதியின் படம் என்று பேசப்பட்டது. இது போன்ற நிலைமை தனக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் ஸ்கிரிப்ட்டை மாற்றினார் என்று கூறப்பட்டது. மேலும் நடிகர் கமல்ஹாசனை போன்று தற்போது சூப்பர் ஸ்டாரும் எச்சரிக்கையாகிவிட்டார் என்று பேசப்படுகிறது.

Categories

Tech |