நடிகர் விஜய்யின் இளம் வயது புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார் . இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது .
விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் இளம் வயதில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் முறுக்கு மீசை வைத்துக்கொண்டு தளபதி செம மாஸாக இருக்கிறார் . கடைசியாக நடிகர் விஜய் மெர்சல் படத்தில் வெற்றிமாறன் என்ற கதாபாத்திரத்திற்காக முறுக்கு மீசை வைத்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.