Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி படத்தை பற்றி பேசவே பயமாக இருக்கிறது….. பிரபல இயக்குனர் கூறிய பதிலால் ரசிகர்கள் ஷாக்….!!!!

தளபதி படத்தை பற்றி பேசவே பயமாக இருக்கிறது என பிரபல இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தப் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் பீஸ்ட் திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது தோழா பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தற்போது நடந்த ஒரு படவிழாவில் இயக்குனர் வம்சியிடம் தளபதி 66 படம் குறித்து கேட்டுள்ளனர். இந்த படத்தை பற்றி பேசவே பயமாக இருக்கிறது என இயக்குனர் வம்சி கூறியுள்ளார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மட்டுமே முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக வேலைகள் நடைபெற்று வருகிறது. எனவே படத்தை பற்றி இப்பொழுது பேசுவது சரியாக இருக்காது. இருப்பினும் தளபதி 66 திரைப்படம் ஒரு சிறந்த படமாக இருக்கும் என நம்புகிறேன் என்று இயக்குனர் வம்சி கூறியுள்ளார்.

Categories

Tech |