தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். பீஸ்ட் படத்தின் வெற்றியே தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்து வருகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்த புகழ் பெற்றவர் சரண்யா பொன்வண்ணன். இவர் அஜித், சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். ஆனால் விஜய்க்கு மட்டும் இதுவரை அம்மாவாக நடிக்கவில்லை. இது குறித்து பேசிய சரண்யா பொன்வண்ணன் எனக்கும் விஜய்க்கு அம்மாவா நடிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருக்கின்றது. அது ஏன் என்று தெரியவில்லை. விஜய்க்கு அம்மாவாக நடிக்க வாய்ப்பு இதுவரை அமையவில்லை. இருப்பினும் எதிர்காலத்தில் கண்டிப்பாக அந்த வாய்ப்பு அமையும் என்று அவர் கூறினார்.