Categories
சினிமா தமிழ் சினிமா

‘தல 61’ படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்… செம குஷியில் அஜித் ரசிகர்கள்…!!!

தல 61 படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது மீண்டும் இந்த  கூட்டணியில் வலிமை படம் தயாராகி வருகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் அஜித்தின் 61-வது படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர்.

Thala Ajith's 'Valimai' to undergo two major changes? - Tamil News -  IndiaGlitz.com

ஏனென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வலிமை படத்தின் எந்த ஒரு அப்டேட்டையும் போனி கபூர் வெளியிடவில்லை. சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது. இதனால் இனி போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்க வேண்டாம் என ரசிகர்கள் விரும்பினர். இந்நிலையில் தல 61 படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அஜித்தின் விஸ்வாசம், விவேகம் போன்ற படங்களை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |