Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

தலை முடியில் உள்ள பொடுகு நிரந்தரமாக நீங்க எளிய டிப்ஸ் …!!!

தலை முடியில் உள்ள பொடுகு நிரந்தரமாக நீங்க வழியை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :

கற்றாழை:

 

கற்றாழை பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு குணங்களை கொண்டிருப்பதால் இது பொடுகை போக்க பயன்படுத்தலாம்.

வேப்ப இலை :

வேப்பிலை அரைத்து விழுதை நீர்க்க கரைத்து தலையில் தேய்த்து விரல்களால் மசாஜ் செய்யலாம். இந்த கசப்பு தலையில் இறங்க இறங்க பொடுகு நீங்க கூடும்.

​பூண்டு:

இது எப்போதும் வீட்டில் இருக்க கூடிய பொருள். பூண்டு பூஞ்சை காளான்களை நீக்கும் தன்மை கொண்டவை. பொடுகை உண்டாக்கும் நுண்ணுயிர்க்கிருமிகளை வெளியேற்றும் குணங்களை கொண்டவை.

முட்டை மஞ்சள் கரு:

சருமத்துக்கும் கூந்தலுக்கும் முட்டையின் வெள்ளை கருவை பயன்படுத்துவோம். ஆனால் முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கும் பயோட்டின் பொடுகுக்கு சிகிச்சை அளிக்கும் வைட்டமின் சத்து கொண்டவை.

துளசி:

பல மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் மூலிகையில் முக்கியமானது துளசி. இது பூஞ்சை காளான் மற்றும் எதிர்ப்பு பாக்டீரியா குணங்களை கொண்டிருப்பதால் அதிகமான பொடுகு பாதிப்பிலிருந்தும் மீட்க உதவும்.

Categories

Tech |