Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தலை சுற்றுவதாக கூறிய சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!!

பெண் குழந்தை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை அரசஅடி விநாயகர் கோவில் தெருவில் சங்கிலி பூதத்தான் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய வசந்தி என்ற மகள் இருந்துள்ளார். நேற்று காலை தனக்கு திடீரென தலை சுற்றுவதாக சிறுமி கூறியுள்ளார்.

சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த சிறுமியை பெற்றோர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் வசந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் சிறுமியின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |