கரப்பான் பூச்சியை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
12 முதல் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக கரப்பான் பூச்சிகள் உலகத்தில் தோன்றியது. இந்த பூச்சிகள் டைனோசர் தோன்றிய காலத்தில் உருவானது. அனால் டைனோசர்கள் அழிந்த பிறகும் கரப்பான் பூச்சி அழியாமல் இன்றளவும் வாழ்ந்து வருகிறது. தற்போது உருவத்தில் பெரிதாக இருக்கும் டைனோசர் அழிந்த பிறகும் கரப்பான் பூச்சி மட்டும் எப்படி உயிர் வாழ்கிறது தெரியுமா? அதாவது கரப்பான் பூச்சி உருவத்தில் சிறியதாக இருப்பதால் குகைகளில் பதுங்கி கொள்கிறது. இதனால் தான் கரப்பான் பூச்சியால் உயிர் வாழ முடிந்தது. இந்த கரப்பான் பூச்சியில் முட்டைகள் மிகவும் கடினமாக இருக்கும். இந்த முட்டையை எளிது உடைக்க முடியாது. இதுவும் கரப்பான் பூச்சி உயிர் வாழ்வதற்கான காரணம் ஆகும்.
இந்த கரப்பான் பூச்சியின் ஆயுட் காலம் 1 வருடம் ஆகும். இது 40 நிமிடங்கள் வரை தன்னுடைய மூச்சை அடக்கிக் கொள்ளும் திறன் உடையது. இதன் காரணமாக கரப்பான் பூச்சியால் 30 நிமிடங்கள் தண்ணீரிலும் வாழ முடியும். இந்த கரப்பான் பூச்சி உலகத்தில் மொத்தம் 4,600 வகைகள் உள்ளது. இதில் 30 வகைகள் மட்டுமே மனிதர்கள் வாழும் இடங்கள் வாழ்கிறது. இதனையடுத்து மற்ற வகை கரப்பான் பூச்சிகள் அடர்த்தியான காட்டுப் பகுதியில் வாழ்கிறது. இந்த கரப்பான் பூச்சியின் தலையை துண்டித்த பிறகும் 9 நாட்கள் வரை உயிர்வாழும். இதற்கு காரணம் கரப்பான்பூச்சி மூக்கின் வழியாக சுவாசிக்காமல் உடலில் தன்னுடைய இருக்கும் சிறிய துளைகள் மூலமாக சுவாசிக்கும். இதனால் தான் கரப்பான் பூச்சியால் தலை இல்லாமல் 9 நாட்கள் உயிர் வாழ முடிகிறது.