தலைவி திரைப்படத்தில் அரசியல்வாதியாக நடிக்கும் சமுத்திரகனி தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
தமிழில் உருவாகிக்கொண்டிருக்கும் தலைவி திரைப்படத்தில் பிரபல அரசியல்வாதியாக நடிகர் சமுத்திரகனி நடிக்கிறார். இப்படம் பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தலைவி திரைப்படத்தில் எனக்கான படப்பிடிப்பு நிறைவடைந்தது. மிக்க மகிழ்ச்சி.. பேரன்பான இயக்குனர் ஏஎல்.விஜய் … செல்வி கங்கனா ரணாவத்.. திரு. அரவிந்த்சாமி மற்றும் என்னுடன் நடித்த சக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் நன்றி..! வெல்வோம்…!” என்று அவர் தெரிவித்துள்ளார்.