Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘தலைவி’ இறுதிநாள் படபிடிப்பு… டுவிட்டரில் அரவிந்த் சாமி வெளியிட்ட புகைப்படம்…!!

நடிகர் அரவிந்த் சாமி ‘தலைவி’ பட இறுதிநாள் படபிடிப்பு புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் ‘தலைவி’ . இயக்குனர் விஜய் இயக்கியுள்ள  இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார் . கொரோனா ஊரடங்கால் தாமதமான இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது ‌. இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகை கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ எங்கள் கனவு திரைப்படமான தலைவி படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம் . வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும் . ‘தலைவி’ படக்குழுவினருக்கு எனது நன்றி’ என பதிவிட்டிருந்தார் .

இந்நிலையில்  இந்த படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் அரவிந்த்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தலைவி’ இறுதிநாள் படப்பிடிப்பு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ‘தலைவி’ படத்தில் புரட்சித்தலைவரின் அழகையும், கவர்ச்சியையும் என்னில் கொண்டு வர உதவிய ரஷீத் க்கு நன்றி என பதிவிட்டுள்ளார் .

Categories

Tech |