Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தலைவன் வேற லெவல்…. “ஷாம்பெயின் குலுக்க போறோம்”…. கொஞ்சம் வெளிய போங்க…. மத நம்பிக்கைக்கு மதிப்பு கொடுத்த பட்லர்… பாராட்டும் ரசிகர்கள்..!!

ஜோஸ் பட்லர், இங்கிலாந்து வீரர்கள் ஷாம்பெயின் கொண்டு கொண்டாடப் போவதால், அடில் ரஷித் மற்றும் மொயீன் அலியை வெளியேறுமாறு நினைவுபடுத்தியது பாராட்டுகளை பெற்றுள்ளது.

2022 டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் பாபர் அசாமின் பாகிஸ்தான் அணி மெல்போர்ன் மைதானத்தில் மோதியது. முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கி ஆடிய இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸின் சிறப்பான ஆட்டத்தால்  138 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து அணி 2ஆவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது. சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய இங்கிலாந்து அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது..

இதற்கிடையே வெற்றிக்குப் பின் இங்கிலாந்து அணி வீரர்கள் ஒன்றாக அமர்ந்து கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டனர். மேலும் கோப்பை வைத்து துள்ளி குதித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் போது அடில் ரசித் மற்றும் மொயின் அலி இருவரும் உடன் இருந்தனர். அப்போது சகவீரர்கள் ஷாம்பெயின் குலுக்கி கொண்டாட தயாராக இருந்தனர். இதனை கண்ட ஜோஸ் பட்லர் அணி வீரர்களான ரசித் மற்றும் மொயின் அலி செல்லும் வரை காத்திருக்க சொன்னார். மேலும் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டார்.

அதன் பின் அவர்கள் மேடையை விட்டு சென்ற பின் காத்திருந்து அவர்கள் ஷாம்பெயின் குலுக்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினர். விளையாட்டு என்பது இனம், மொழி மற்றும் மத நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது  என்றாலும், சக இஸ்லாம் வீரரின் மத நம்பிக்கைக்கு மரியாதை அளித்து பட்லர் செய்த செயலை சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

 

பொதுவாக ஒரு கேப்டன் தனது அணியில் உள்ள வீரர்களின் திறமை மற்றும் குணங்களை தெரிந்து கொண்டால் மட்டுமே அவர்களது சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வர முடியும். அந்த வகையில் கேப்டன் பட்லர் சக வீரர்களின் திறமைகளை அறிந்து அதனை களத்தில் செயல்படுத்தி வெற்றியும் கண்டுள்ளார். அவருடைய மத நம்பிக்கைக்கு மதிப்பு அளித்து கேப்டன் என்பதையும் தாண்டி தான் ஒரு நல்ல மனிதன் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். அவரது கேப்டன்ஷிப் திறமை மற்றும் அவரின் குணத்திற்கே இந்த சாம்பியன் பட்டத்தை வெல்ல தகுதியானவர் ஜோஸ் பட்லர் என்பதை அடித்து சொல்லலாம்..

 

https://twitter.com/AvinashArya09/status/1591808828181721090

 

Categories

Tech |