Categories
தேசிய செய்திகள்

தலையை எடுக்க வேண்டுமா….? லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல்…. திடீர் பரபரப்பு…!!!

காளி தெய்வம் சிகரெட் பிடிக்குமாறு போஸ்டரை வெளியிட்ட பெண்மணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கனடா நாட்டில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை கவின்கலை படிப்பு படித்து வரும் லீனா மணிமேகலை செங்கடல், மாடத்தி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது காளி என்ற ஒரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் காளி தெய்வம் சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்‌. இந்த புகைப்படம் இந்து மதத்தை அவமதிப்பது போன்றதாகும் என்று பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே லீனா மணிமேகலை மீது பல்வேறு இடங்களில் உள்ள காவல்நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டது.

இதற்கு லீனா மணிமேகலையும் விளக்கம் கொடுத்திருந்தார். அதன்படி ஒரு மாலை நேரத்தில் காளி தெய்வமானது வீதியில் உலாவரும் காட்சி போன்று படமாக எடுத்துள்ளேன் என்று கூறினார். அதன் பிறகு என் உடம்பில் உயிர் இருக்கும் வரை நான் எதையும் அஞ்சாமல் பேசுவேன் என்றும் அதற்கு என் உயிர் தான் விலை என்றால் அதையும் கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்றும் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு ஹனுமன் கோவிலில் சாமியாராக இருக்கும் ராஜு தாஸ் மகாந்த் என்பவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவை லீனா மணிமேகலைக்காக வெளியிட்டுள்ளார். அதில் நுபுர் சர்மாவை பற்றி உண்மை கருத்துக்களை கூறியதற்கு என்ன நடந்தது என்பது தெரியும். இந்த சமயத்தில் காளி தெய்வம் சிகரெட் பிடிக்குமாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உலகம் முழுவதும் பெரும் கலவரத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள். உங்கள் உடம்பிலிருந்து தலையை பிரிக்க விரும்புகிறீர்களா? மேலும் உள்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு லீனா மணிமேகலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |