சென்னை தலைமைச் செயலகம் அருகே முதியவர் தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதியவர் பொன்னுசாமி, சுப்பிரமணி என்பவருக்கு 14 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். ஆனால் கடன் வாங்கிய சுப்பிரமணி பணத்தைத் திருப்பித் தரவில்லை. இதுகுறித்து சுப்பிரமணியன் மீது பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற முதியவர் குற்றம் சாட்டியுள்ளார். அதனால் சென்னை தலைமைச் செயலகம் அருகே பொன்னுசாமி தீக்குளித்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
Categories
தலைமை செயலகம் அருகே முதியவர் தீக்குளிப்பு…. பெரும் பரபரப்பு….!!!!
