தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள் மட்டுமே செயல்படும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தலைமைச்செயலகத்தில் அவசியமாக தேவைப்படும் பணியாளர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் என்றும், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரும் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நோய் தொற்று தடுப்பதற்கான முறையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.