Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

தலைமுடி அதிகமாக உதிர்கிறதா? இதை தேய்த்து பாருங்க…!!

எண்ணெய் செய்ய தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய்           – 500 மில்லி லிட்டர்
கறிவேப்பிலை                           – கை அளவு
கரிசலாங்கண்ணிக் கீரை  – கையளவு
நெல்லிக்காய்                             – 2 கொட்டை நீக்கியது
வேப்பிலை                                   – 8-9
சின்ன வெங்காயம்                 – 3 சிறிதாக நறுக்கியது
மருதாணி இலை                      – கை அளவு
செம்பருத்திப்பூ                         – பத்து இதழ்கள்
வெந்தயம்                                     – ஒரு டேபிள்ஸ்பூன்
ஓமம்                                                – சிறிதளவு
பச்சை கற்பூரம்                         –  ஒரு சிட்டிகை

செய்முறை:

மிக்ஸி ஜாரில் கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணிக் கீரை, நெல்லிக்காய், வேப்பிலை, சின்ன வெங்காயம், மருதாணி இலை, செம்பருத்திப்பூ, வெந்தயம், ஓமம், பச்சை கற்பூரம் என  அனைத்தையும் நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் அரைத்த கலவையை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு நிறம் மாறியதும் இறக்கவும். அதன் பின் இரண்டு நாட்கள் அப்படியே வைத்திருக்கவும். பின்பு காற்று புகாத பாட்டிலில் வடிகட்டி ஊற்றி வைக்கவும். இதை தலையில் தேய்த்து வருவதினால் தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

Categories

Tech |