Categories
தேசிய செய்திகள்

தலைநகர் டெல்லியில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி…. அரசு வெளியிட்ட அறிக்கை….!!!!

இந்தியாவில் கொரோனா 3-வது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் திடீரென தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தியாவில் கொரோனாவின் அடுத்த அலை தாக்காமல் இருக்க தனியார் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தலைநகர் டெல்லியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3-வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. எனவே டெல்லி அரசு விரைவில் மருத்துவமனைகளில் இலவசமாக இதற்கான மருந்துகள் விநியோகிக்கப்படும் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Categories

Tech |