தலைநகர் டெல்லியில் வீடு இடிந்து விழுந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் உள்ள பேகும்பூர் பகுதியில் இன்று அதிகாலை திடீரென வீடு ஒன்று இடிந்து விழுந்தது. அந்த வீட்டிலிருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியனர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய 2 பேரை தீயணைப்பு துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து மீட்டுள்ளனர். மேலும் மீட்கப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாக தீயணைப்பு துறையினர் கூறியுள்ளனர். அதிகாலை 4:15 மணிக்கு தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட தகவலின் பேரில் அவர்கள் நடவடிக்கை எடுத்து இரண்டு பேரை மீட்டுள்ளனர். இரண்டு பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.