Categories
தேசிய செய்திகள்

தலைநகரில் தீ விபத்து சம்பவங்கள் குறித்து…. 201 போல் கால்கள்…. தீயணைப்புத்துறை இயக்குனர் தகவல்….!!!!

இந்தியாவில் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடைகளை அணிந்தும், பட்டாசுகளை வெடித்தும், பலகாரங்களை உண்டும் பண்டிகையை கொண்டாடினர். இதற்கிடையில் டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் வெடிப்பதற்கு இந்த வருடம் டெல்லி அரசு தடை விதித்துள்ளது.

அதன்படி ஒட்டுமொத்த பட்டாசுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை கூட விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் தீபாவளி அன்று பல இடங்களில் தீவிபத்து சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லி தீயணைப்புத்துறையின் இயக்குனர் அதுல்கார்க் கூறியதாவது, டெல்லியில் நேற்று தீபாவளி பண்டிகையின் போது, தீவிபத்து சம்பவங்கள் குறித்து 201 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது. பண்டிகையை முன்னிட்டு உயர்ந்த கட்டிடங்களுக்கும் சென்று தீயை அணைக்கும் அடிப்படையில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தவும் தயார் நிலையில் தீயணைப்புதுறை இருக்கிறது என அவர் முன்பு தெரிவித்தார். அந்த வகையில் நெருக்கடி நிறைந்த பகுதிகளில் அது போன்ற தீ விபத்து சம்பவங்களை கட்டுப்படுத்த தீயணைப்புவீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Categories

Tech |