Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தலைக்கு மேலாக கத்தி தொங்குது – ஐகோர்ட் அதிரடி கருத்து …!!

மருத்துவ படிப்பில் 7.5% ஒதுக்கீட்டை ரத்து செய்ய தொடர்ந்த வழக்கில் மாணவர்கள் தலைக்கு மேலாக கத்தி தொங்குவதை நீதிமன்றம் அனுமதிக்காது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

மருத்துவ மேற்படிப்பிற்கு மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பின்பு தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோனது. அதிகமானோர் தோல்வியடைந்து, சில சொற்ப எண்ணிக்கையிலேயே மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்த நிலையில் மாணவர் நலன் கருத்தில் கொண்டு தமிழக அரசாங்கம் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வந்தது.

இதன் மூலம் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு இந்த ஆண்டு முதல் அமல்படுத்தி வருகிறது. இதனால் 400க்கும் அதிகமான மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தும் கூட மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக அரசு கொண்டு வந்த  7.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த முறை நடந்த நீட் தேர்வில் மூன்றாவது முறையாக தேர்வு எழுதிய பூஜா என்ற மாணவி 565 மதிப்பெண் எடுத்தும் தனக்கு நீட்தேர்வு கிடைக்கவில்லை. என்னுடைய மருத்துவ கனவை தமிழக அரசு கொண்டு வந்த 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தட்டி பறித்துள்ளது. எனவே தமிழக அரசின் இந்த அவசர சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் 135 மதிப்பெண் எடுத்தவர்களுக்கு கூட மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது, தனக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரசுக்கு பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்றும் , அது வரை இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது. 7.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யக்கூடாது.7.5% இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கான இடங்களுக்கான கட்டணத்தை அரசு செலுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே குறுக்கிட்ட மனுதாரர் 7.5 இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட 405 மாணவர்கள் மாணவர் சேர்க்கை நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் மாணவர்கள் தலைக்கு மேலாக கத்தி தொங்குவதை நீதிமன்றம் அனுமதிக்காது என்று உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்கள்.

Categories

Tech |