Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த சரக்கு ஆட்டோ…. 2 பெண்கள் பலி…. கோர விபத்து…!!

சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தை சேர்ந்த 10 பேர் சரக்கு ஆட்டோவில் உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் திருச்சி- கல்லணை சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி சரக்கு ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.

இதனால் நிலைதடுமாறிய சரக்கு ஆட்டோ சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த 10 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லட்சுமி(55) சூரியா(34) ஆகிய இரண்டு பேரும் பரிதாபமாக இறந்துவிட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |