ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூரில் இருந்து ஆட்டோ ஒன்று பயணிகளுடன் பாட்டவயல் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பாலவயல் பாலம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ எதிரே வந்த ஜீப் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த செல்வராணி(75), லெனின்(12), தேவராஜ்(70) ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.