Categories
உலக செய்திகள்

தலிபான் பொறுப்பேற்ற பின் முதன் முறையாக மீண்டும்… மரண தண்டனை…? அச்சத்தில் பொதுமக்கள்…!!!!

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் மற்றும் நோட்டா படைகள் வெளியேறிய பின் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி சிறுபான்மையினரின் ஷரியத் சட்டத்தின்படி ஆட்சி நடைபெறும் என அறிவித்துள்ளனர். மேலும் பொது மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தொடக்க கல்வியில் அனுமதி அளித்து, மேல்நிலைக் கல்வியை மறுத்துள்ளனர். அதேபோல் பெண்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது ஆண்கள் துணை இல்லாமல் தனியாக செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

ஒரு வருடத்திற்கும் மேலாக இது போன்ற பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் அங்கு வறுமை, பசி போன்ற சமூக பிரச்சனைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த 2017 – ஆம் வருடம் மேற்கு ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக ஒருவர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது குற்றம் 3 நீதிமன்றங்களிலும் நிரூபிக்கப்பட்டது. அதனால்  ஆப்கானிஸ்தானின் தெற்கு கந்தஹாகார் மாகாணத்தை சேர்ந்த தலிபான் தலைவரும் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டதால் குற்றவாளிக்கு பொதுவெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தலிபான் செய்தி  தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இது தொடர்பாக உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் தலிபான்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |