ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முற்றிலுமாக கைப்பற்றி விட்ட நிலையில், அந்நாட்டின் பிரதமர் யார் என்று தலிபான்கள் ஆலோசனை நடத்தி வந்தனர்.. இந்த நிலையில் தலிபான் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, தலிபான் அரசின் புதிய பிரதமராக முல்லா ஹசன் அகுந்த் இருப்பார்.. தலிபானின் இணை நிறுவனர் அப்துல் கனி பரதர் முதல் துணைத் தலைவராகவும், மவ்லவி ஹன்னாஃபி இரண்டாவது துணைத் தலைவராகவும், முல்லா யாகூப் பாதுகாப்பு துறை அமைச்சராகவும், செராஜுதீன் ஹக்கானி ஆப்கானிஸ்தானின் புதிய தலிபான் அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராகவும் செயல்படுவார் என்று கூறியுள்ளார்.. மேலும் ஆப்கானிஸ்தானின் அனைத்து பகுதிகளும் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
Categories
தலிபான் அரசின் புதிய பிரதமராக முல்லா ஹசன் தேர்வு… அதிகார்வ பூர்வ அறிவிப்பு!!
