ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு ஒரு சில நாட்களில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளனர். இதனால் அவர்களின் கொடுமையான ஆட்சிக்கு பயந்த அந்த நாட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு தப்பித்து சென்று விடலாம் என்று விமானங்களில் ஏறுவதற்கு கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர். இது குறித்து வெளியாகி வீடியோவெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பல நாடுகளும் ஆப்கான் மக்கள் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆப்கானில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் தாலிபான்களின் பேஸ்புக் கணக்குகளை முடக்குவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.