Categories
தேசிய செய்திகள்

தலித் வீட்டில் சாப்பிட்ட எடியூரப்பா, பசவராஜ் பொம்மை…. வெளியான புகைப்படம்…..!!!!

கர்நாடகா மாநிலத்தில் பா.ஜ.க தேர்தல் பிரசாரம்யாத்திரையின் ஒரு பகுதியாக எடியூரப்பா மற்றும்  முதல்வர் பசவராஜ்பொம்மை தலித் ஒருவரின் வீட்டில் இன்று உணவு அருந்தினர். பாஜக-வுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் கர்நாடகத்தில் அடுத்த வருடம் சட்டப் பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையிலும் மாநில அளவில் பா.ஜ.க யாத்திரை மேற்கொண்டு உள்ளது. கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க, ராய்ச்சூர் மாவட்டத்திலிருந்து நேற்று தன் ஜன்சங்கல்ப் யாத்திரையை துவங்கியது. இன்று 2வது தினத்தில் முன்னாள் முதலமைச்சரும், கட்சியின் மூத்த தலைவரும் ஆன எடியூரப்பா மற்றும் முதல்வர் பசவராஜ்பொம்மை கமலாபூர் கிராமத்தில் ஹிரலா கொல்லப்பா எனும் தலித் நபரின் வீட்டில் காலை உணவு அருந்தினர்.

அப்போது அமைச்சர்கள் கோவிந்த் கரஜோல், ஆனந்த் சிங் போன்றோரும் உடனிருந்தனர். இதற்கிடையில் இந்த புகைப்படங்கள் பற்றி விமர்சனங்களும் எழுந்துள்ளது. அத்துடன் ஹோட்டல் உணவு, இலையில் சாப்பாடு, கேன்தண்ணீர், காபி கப் எனக் குறிப்பிட்டு நெட்டிசன்கள் பலரும் விமரிசித்து வருகின்றனர். முன்பாக சிக்மகளூரு மாவட்டத்தில் பா.ஜக. ஆதரவாளர் ஒருவர் 14 தலித்துகளை சிறைபிடித்து சித்திரவதை செய்ததும், இதில் கர்ப்பிணி ஒருவருக்கு கருச் சிதைவு ஏற்பட்டதும் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சென்ற அக்டோபர் 8ம் தேதி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க கர்நாடக அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.

Categories

Tech |