பிரபல சர்ச்சை நடிகை மீரா மிதுன் தற்கொலை செய்யப்போவதாக சற்றுமுன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். அவர் தமிழ் திரை உலகில் விஜய், சூர்யா, ரஜினி என அனைவரையும் கடுமையாக விமர்சித்தவர். அதனால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அவர் தற்போது தற்கொலை செய்யப்போவதாக சற்றுமுன் ட்விட்டரில் பதிவிட்டு இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
சிலர் தொடர்ந்து துன்புறுத்துவதாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறேன். நான் இறந்துவிட்டால் என்னுடைய சாவுக்கு காரணமான அனைவரையும் தூக்கிலிட வேண்டும் என்ற பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.