Categories
சினிமா தமிழ் சினிமா

“தற்கொலை செய்து கொண்ட தீபாவின் ஐபோனை காணவில்லை”…. தேடுதலில் போலீசார்…!!!!!

தற்கொலை செய்து கொண்ட நடிகை தீபாவின் ஐபோனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றார்கள்.

ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்ட பிரபல நடிகை பவுலின் ஜெசிகா என்கின்ற தீபா திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் விஷாலின் துப்பறிவாளன், ராட்சசன், தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து போலீசார் தீபாவின் உடலை மீட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். அதில் தீபா எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதை தொடர்ந்து தீபாவை காதலித்து வந்த உதவி இயக்குனர் சிராஜுதீன் என்பவரை போலீசார் விசாரணை செய்து வருகின்றார்கள். இதனிடையே தீபா பயன்படுத்தி வந்த செல்போனை காணவில்லை எனவும் அதனை சிராஜுதீனின் நண்பர் எடுத்துச் சென்று விட்டதாகவும் தீபாவின் சகோதரர் குற்றம் சாட்டியிருக்கின்றார். இதை தொடர்ந்து தீபாவின் செல்போனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றார்கள்.

Categories

Tech |