கட்டிட வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தனியார் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.
மும்பையை சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர் ஆன்வேநயாக்கும் அவரது தாயாரும் கடந்த 2018 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டனர். தனியார் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி பணத்தை கொடுக்காததே இதற்கு காரணம் என குற்றம் சாட்டபட்டது. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அர்னாப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.