காதலில் ஏற்பட்ட பிரச்சனையால் வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பெசன்ட் நகர் கடற்கரையில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த வாலிபர் திடீரென கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் கடலுக்குள் நீந்தி சென்று அந்த வாலிபரை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
அதன் பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குமார் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் குமார் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் குமார் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. அதன்பின் அறிவுரை கூறி காவல்துறையினர் குமாரை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.