Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற போலீஸ் ஏட்டு…. விசாரணையில் தெரிந்த உண்மை…. பரபரப்பு சம்பவம்…!!

பெண் போலீஸ் ஏட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருநீர்மலையில் செண்பகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செண்பகம் காவல்நிலையம் அருகில் இருக்கும் கடைக்கு சென்று மருந்து வாங்கி வந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதனை அடுத்து மயங்கி விழுந்த செண்பகத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த அலுவலக பணியை செய்து முடிக்காததால் சக போலீசார் முன்னிலையில் செண்பகத்தை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த செண்பகம் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

Categories

Tech |