Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தறிகெட்டு ஓடி கடைகள் மீது மோதிய கார்….. ஓட்டுநருக்கு தர்மஅடி கொடுத்த வியாபாரிகள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

தாறுமாறாக ஓடிய கார் சாலையோர கடைகள் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். நேற்று மாலை எரிச்சாலையில் அதிவேகமாக சென்ற கார் சாலையோரம் இருந்த 6 கடைகள் மீது பயங்கரமாக மோதியது. மேலும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது தறிக்கெட்டு ஓடிய கார் ஓடியதால் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நளினி என்ற சுற்றுலா பயணியும், வேளாங்கண்ணி என்ற வியாபாரியும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சாலையோர வியாபாரிகள் காரை ஓட்டி வந்த நபரை பிடித்த போது அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது.

இதனால் வியாபாரிகள் அவரை சரமாரியாக அடித்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாறுமாறாக காரை ஓட்டி சென்று சுரேஷ் விபத்தை ஏற்படுத்திய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Categories

Tech |